News September 5, 2025

ஏறுமுகத்தில் பங்குச்சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

image

GST மறுசீரமைப்புக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இன்று(செப்.5) வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 294 புள்ளிகள் உயர்ந்து 81,012 புள்ளிகளிலும், நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24,818 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. HDFC Life, Wipro, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டுள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?

Similar News

News September 7, 2025

இந்தியாவின் 4-வது கோப்பை

image

ஆசியக் கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில் இந்தியா 4-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 1982 முதல் நடைபெற்றுவரும் இந்த தொடரில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தென்கொரியா முதலிடத்தில் உள்ளது. 4 முறை சாம்பியனான இந்தியா 2-வது இடத்திலும், 3 முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன. சீனா, ஜப்பான், மலேசிய அணிகள் ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை.

News September 7, 2025

தேவருக்கு பாரத ரத்னா கேட்கும் EPS-ன் கணக்கு இதுவா?

image

முத்துராமலிங்க தேவருக்கு <<17642038>>பாரத ரத்னா விருது<<>> வழங்குமாறு மத்திய அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். சசிகலா, டிடிவி தினகரன், OPS உள்ளிட்டோரின் நீக்கத்தால் குறிப்பிட்ட சமூக வாக்குகளை அதிமுக இழந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த சமூகத்தின் அமைப்பினர், அவ்வப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை சமாளிக்கவே EPS இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ளாராம்.

News September 7, 2025

Parenting: உங்கள் குழந்தையிடம் இதெல்லாம் கவனிச்சீங்களா?

image

பெற்றோர்களே, குழந்தையை ஒழுக்கமாக, அறிவாக வளர்த்தால் போதாது, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்யவேண்டும். 10 வயதுக்குள்ளான குழந்தைகள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க வழிகள் இருக்கிறது. ➤சந்தோஷமான குழந்தைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்கமாட்டார்கள் ➤விளையாட்டுத் தனமாக இருப்பர் ➤உறங்குவதில் சிரமம் இருக்காது ➤ உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புவர். SHARE.

error: Content is protected !!