News September 5, 2025
JUST NOW: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள்

மிலாடி நபி (ம) வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி,மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு 1,115 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே சமயம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்திற்கு 18004256154, 044-24749002 எண்களில் புகார் செய்யலாம்.
Similar News
News September 5, 2025
செங்கல்பட்டு மக்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (91765 64884) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 5, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் படகு போக்குவரத்து சேவை.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் பகுதியில் இருந்து, சென்னை நேப்பியர் பாலம் வரை படகு போக்குவரத்து தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இந்த சேவையை கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான படகு நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
News September 5, 2025
வாகன சோதனையில் ரூ.27.14 லட்சம் அபராதம்

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, ஹமீதாபானு, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய 273 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.27.14 லட்சம் விதிக்கப்பட்டது.