News September 5, 2025

விருதுநகரில் ரூ.71,900 ஊதியத்தில் அரசு வேலை ரெடி

image

விருதுநகர் மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> செப். 30 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். மாவட்ட வாரியாக பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News September 8, 2025

விருதுநகரில் அரிவாளால் வெட்டிக் கொலை

image

விருதுநகர் அடுத்த குல்லூர்சந்தை அருகே மெட்டுக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி(22) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கந்தசாமி அரிவாளால் நாகராஜனை வெட்டி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News September 8, 2025

இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மோதி காயம்

image

அருப்புக்கோட்டை பெத்தம்மாள் நகர் அருகே உள்ள பங்கஜம் பெட்ரோல் பங்க் அருகில் கட்டகஞ்சம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மணி என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் 2 நபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

News September 7, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் பீகார் வாலிபர் உயிரிழப்பு

image

பீகார் மாநிலம், சஹோரா பகுதியைச் சேர்ந்த தூரியாமான்ஜி, சீல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!