News September 5, 2025
எப்படி இருக்கிறது மதராஸி.. ரசிகர்கள் சொல்றத கேளுங்க!

‘மதராஸி’ படத்தின் பர்ஸ்ட் ஷோவை வெளிமாநிலங்களில் பார்த்த ரசிகர்கள் சொல்வதை கேளுங்க.
*SK படத்தில் காதல், காமெடி, ஆக்சன் என அசத்தினார்.
*வித்யூத் பக்கா வில்லன் மெட்டீரியல்.
*SK- வித்யூத் ஜம்வால் ஆக்ஷன் காட்சிகள் அதகளம்.
*சில இடங்களில் படம் தொய்வாக இருந்தாலும், AR முருகதாஸ் நேர்த்தியாக திரைக்கதை அமைத்துள்ளார். *அனிருத்தின் இசை படத்தின் ப்ளஸ். முழு ரிவ்யூவிற்காக Stay tuned with Way2News.
Similar News
News September 7, 2025
துணை ஜனாதிபதிக்கு சம்பளம் இல்லையா?

துணை ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நாட்டின் 2-வது உயரிய பதவியான துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது என்பது தெரியுமா? உண்மைதான். அரசியல் சட்ட அந்தஸ்து கொண்ட பதவிகளில், சம்பளம் இல்லாத ஒரே பதவி இது மட்டும் தான். ஆனால், ராஜ்யசபா தலைவராக பணியாற்றுவதற்காக, அவருக்கு மாதம் ₹4 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதுபோக இலவச பங்களா, மருத்துவப்படி, விமான பயணம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
News September 7, 2025
நாடு முழுவதும் வரப்போகும் மாற்றம்? ECI ஆலோசனை

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை (SIR) மேற்கொள்வது தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வரும் 10-ம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை நீக்குவது, வெளிப்படைத்தன்மை இல்லாதது என SIR-க்கு எதிராக எதிர்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடியது.
News September 7, 2025
BREAKING: நாடு முழுவதும் விலை குறைகிறது

GST 2.0 எதிரொலியாக ஹுண்டாய் நிறுவனம், தங்களது கார்களின் விலையை ₹2.40 லட்சம் வரை குறைத்துள்ளது. முன்னதாக, ரெனால்ட், டொயோட்டா, மஹிந்திரா, மாருதி சுசூகி, டாடா மோட்டர்ஸ் நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்தன. வரும் 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. ஹுண்டாய் நிறுவனம் குறைத்த கார் மாடல்களின் விலையை மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளவும்.