News September 5, 2025

NIA வசம் செல்லுமா தர்மஸ்தலா வழக்கு?

image

தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த புகார் நாட்டையே பதற வைத்தது. இந்த வழக்கை NIA விசாரிக்க வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த ‘சனாதன சாந்த் நியோகா’ என்ற அமைப்பு அமித்ஷாவிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளது. வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கும் எனவும் அவர்களிடம் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

Similar News

News September 8, 2025

இளையராஜா பாடலை குட் பேட் அக்லியில் பயன்படுத்த தடை

image

அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த சென்னை HC இடைக்கால தடை விதித்துள்ளது. ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாய் தாரேன்’ உள்ளிட்ட பாடல்களை, அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா HC-ல் வழக்குத் தொடர்ந்தார். காப்புரிமை சட்டத்தின்படி, அந்த பாடல்களை பயன்படுத்த தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

தவெக தலைவர் விஜய்க்கு EPS பதிலடி

image

வரும் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியதற்கு, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என EPS பதிலளித்துள்ளார். தமிழகத்தில் 2 கட்சிகள் தான் பெரிய கட்சிகள் என கூறிய அவர், அது எந்த கட்சி என மக்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளை வெல்லும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.

News September 8, 2025

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

image

2025-ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. <>https://trb.tn.gov.in<<>> என்ற இணை​யதளம் வாயி​லாக ஆன்​லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் TET தேர்​வில் தேர்ச்சி பெறு​வது கட்டாயம் என்று சமீபத்தில் <<17579658>> SC <<>> உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!