News April 10, 2024

‘இந்தியன் 2’ படத்தில் மனிஷா கொய்ராலா?

image

‘இந்தியன் 2’ படத்தில் நடிகை மனிஷா கொய்ராலா நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. படத்தின் முதல் பாகத்தில், மகன் கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருப்பார். ஆனால், 2ஆம் பாகத்தில் அவருக்கு பெரிய காட்சிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், சிறப்பு தோற்றத்தில் தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Similar News

News March 24, 2026

மோடி விரைவில் ரஷ்யாவுக்கு பயணம்

image

PM மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்தியா – ரஷ்யா சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், மோடியை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார். மேலும், காலத்தால் அழியாத இரு நாடுகளின் நட்புறவை அவர் பாராட்டினார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புடின் 2 நாள்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 642 ▶குறள்: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. ▶பொருள்: ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

News March 24, 2026

இந்தியா சவால்களுக்கு அஞ்சாது: PM மோடி

image

இந்தியா சவால்களுக்கு அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ளும் என்று PM மோடி கூறியுள்ளார். போரின் தாக்கம் உலகின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதாகவும், போர் சூழல்களை நாம் கையாளும் விதத்தையே உலக நாடுகள் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். எப்போதும் அமைதி பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இந்தியா நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!