News September 5, 2025
தி.மலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு விருது

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நல்லாசிரியர் விருதுகள் இன்று (செப்டம்பர் 5) வழங்கப்படுகின்றன. மொத்தம் 386 ஆசிரியர்கள் விருது பெறுகின்ற நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 8, 2025
முதலமைச்சரை வரவேற்ற கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு, ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி வரவேற்றார்.
News September 8, 2025
தி.மலை: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

தி.மலை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் தி.மலை ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<
News September 8, 2025
தி.மலையில் 30 ஆட்டோக்கள் பறிமுதல்

திருவண்ணாமலை நகரில் நேற்று (செப்டம்பர் 07) பௌர்ணமி தினத்தை ஒட்டி உரிய ஆவணங்கள் இன்றி ஏராளமான ஆட்டோக்கள் இயங்கின. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. தொடர்ந்து கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி தலைமையிலான அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது ஆவணம் இன்றி இயங்கிய 30 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.