News September 5, 2025
தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி?

DMK+, ADMK+, NTK, TVK என நான்குமுனை போட்டியாக 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணியோ, ‘இன்னும் 4 மாசம்தான், பொறுத்துக்கோங்க, அப்புறம் நம்ம ஆட்சிதான். நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்’ என கூறியுள்ளார். OPS, TTV தற்போது தனியாக உள்ள நிலையில், தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் யாருக்கு சாதகம்?
Similar News
News September 7, 2025
வில்வித்தையில் தங்கத்தை தட்டி தூக்கிய இந்தியா

கொரியாவில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் காம்பவுண்ட் பிரிவில்,
இந்தியா முதல்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் அடங்கிய இந்திய ஆண்கள் அணி, இன்றைய ஃபைனலில் ஃபிரெஞ்சு ஜோடியை 235- 233 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய பெண்கள் அணி பதக்கத்தை தவறவிட்டாலும், ஆண்கள் அணி சாதித்துள்ளது.
News September 7, 2025
BREAKING: விஜய்யுடன் தேமுதிக கூட்டணி?

தவெக உடன் தேமுதிக கூட்டணி அமைப்பது தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனவரி 9-ல் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் தெரிவிக்க உள்ளதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் – விஜய் இடையே நல்ல நட்புறவு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
News September 7, 2025
ஸ்பெயின் வீரரை எளிதாக காலி செய்த குகேஷ்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் FIDE Grand Swiss செஸ் தொடரின் 3-ம் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் வெற்றி பெற்றார். கருப்பு நிறக்காயுடன் களமிறங்கிய குகேஷ், ஸ்பெயின் டேனில் யுஃபாவை எளிதாக வீழ்த்தினார். .மறுபுறம் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி, ஆஸ்திரிய வீராங்கனை ஆல்கா படெல்காவை 3-வது சுற்றில் வீழ்த்தி முன்னிலைப் பெற்றார்.