News September 5, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரியில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் ஆலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் (செப்-6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில், இலவச முழு உடல் பரிசோதனை & சிகிச்சை சேவைகள் நடைபெற உள்ளன. சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும் ஆதார் கார்டு கொண்டு வந்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
ஓசூர்: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் முதலீடு

ஓசூரில், உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிறுவனம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கும் (Maintenance, Repair and Overhaul) வசதி மற்றும் ஆராய்ச்சி, பயிற்சி மையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
News September 8, 2025
கிருஷ்ணகிரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <
News September 8, 2025
கிருஷ்ணகிரி: 85,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் செப்.11 மற்றும் 12-ம் தேதிகளில் வருகை தருவதையொட்டி, நேற்று (செப்.7) அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ. மதியழகன், தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 85,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.