News September 5, 2025
முதல்வர் குறித்து அவதூறாக பேசியவர் கைது

திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் (ம) அவரது குடும்பத்தினரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசி, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சிற்றம்பலம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 8, 2025
தஞ்சாவூர்: ஓட ஓட வெட்டி படுகொலை

பேராவூரணி பாஜக ஒன்றிய தலைவர் ராஜேஷ் குமார் என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் 15 லட்சம் கடன் தொகை பெற்றுள்ளார். தலைமறைவான சக்திவேலின் தம்பி பிரவீன் குமார் நேற்று நள்ளிரவு ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வாட்டாத்தி கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்துவிட்டு ராஜேஷ் குமார் காவல்நிலத்தில் சரணடைந்தார்.
News September 8, 2025
தஞ்சாவூரில் வெளுத்து வாங்கிய மழை

தஞ்சாவூர்: வானிலை ஆய்வு மையம் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்திருந்தது. அதன் படி நேற்று இரவு தஞ்சை மற்றும் அதன் மாவட்டத்தில் பிற இடங்களான திருவையாறு, பூதலூர், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மழையால் தற்போது அறுவடை பணிகளை ஆரம்பித்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News September 8, 2025
தஞ்சாவூர் மக்களே அவங்க திரும்பவும் வராங்க!

தஞ்சாவூர் மக்களே உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட மாவட்டம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை 09.09.2025 ஆம் தேதி நமது தஞ்சை மாவட்டத்தில் திட்ட முகாம் நடைபெறும் இடங்களை பார்க்கலாம். ⏩தஞ்சாவூர், ⏩பட்டுக்கோட்டை , ⏩ஒரத்தநாடு, ⏩திருமங்கலகோட்டை , ⏩கும்பகோணம், ⏩பட்டிஸ்வரம், ⏩அம்மாபேட்டை ⏩திருக்கருக்காவூர், ⏩பேராவூரணி ஆகிய பகுதிகளில் நடைபெறும். SHARE பண்ணுங்க!