News September 5, 2025
தோனியே இன்ஸ்பிரேஷன்: பாக்., மகளிர் அணி கேப்டன்

எனக்கு கேப்டன் பதவி கிடைத்தபோது, தோனியை போல் ஆக வேண்டும் என்று நினைத்தேன் என பாக்., மகளிர் அணி கேப்டன் ஃபாத்திமா சனா தெரிவித்துள்ளார். தோனியே தனது இன்ஸ்பிரேஷன் என கூறி நெகிழ்ந்துள்ளார். கேப்டனாக மைதானத்தில் அவரது முடிவெடுக்கும் திறன், வீரர்களை ஆதரித்து செல்லுதல் ஆகியவற்றில் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். தோனியின் கேப்டன்சியில் உங்களுக்கு பிடித்தது எது?
Similar News
News March 27, 2026
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அதிகரிக்கிறதா?

+2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் 3-வது வாரத்தில் இருந்து விடுமுறை தொடங்கும். வழக்கமாக கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாம். ஏற்கெனவே தேர்தலையொட்டி கோடை விடுமுறை முன்கூட்டியே தொடங்குவது குறிப்பிடத்தக்கது. SHARE IT
News March 27, 2026
பென்டகனில் Pizza ஆர்டர் Increase.. என்ன நடக்க போகிறது?

அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகனை சுற்றியுள்ள பகுதிகளில் பீட்சா ஆர்டர் அதிகரித்துள்ளதாம். பென்டகன் அருகே பீட்சா ஆர்டர் அதிகரித்துள்ளது அமெரிக்க ராணுவம் பெரிதாக ஏதோ ஒன்றை திட்டமிட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் கேந்திரமான கார்க் தீவை கைப்பற்ற தனிப்படை அனுப்பலாம் என்றும் ஈரான் மீது அமெரிக்கா விரைவில் தரைவழித் தாக்குதல் நடத்தலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 27, 2026
Shrey ஹெல்மெட்டின் வரலாறு தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்கள் Shrey என்ற பிராண்டின் பெயரை கிரிக்கெட் ஹெல்மெட்களில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். விளையாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திக்கு பெயர்போன கோலி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இதன் உரிமையாளர் ராகவ் கோலியின் சகோதரர் (Shrey kohli) கார் விபத்தில் உயிரிழக்க அவரின் நினைவாக Shrey பிராண்ட் உருவாக்கப்பட்டது. இன்று பல வீரர்களின் உயிர் கவசமாக Shrey மாறியுள்ளது.


