News September 5, 2025

ரிலீஸுக்கு பின்பு புரமோஷன்? துல்கர் சல்மான் பதில்

image

கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‘Lokah Chapter 1: Chandra’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், ரிலீஸுக்கு முன்பு சரியான புரமோஷன் செய்யாத படக்குழு, தற்போது பேட்டிகளை வாரி வழங்கி வருகிறது. இதுகுறித்து பேசிய பட தயாரிப்பாளர் துல்கர் சல்மான், இந்த வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இது இயற்கையாகவே கிடைத்தது என்று நெகிழ்ந்தார். நீங்க படம் பார்த்துட்டீங்களா?

Similar News

News September 5, 2025

மூலிகை: உடல் எடை குறைக்க உதவும் பொன்னாங்கண்ணி!

image

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤இந்த கீரையில் உப்பு & மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க உதவுமாம்.
➤பொன்னாங்கண்ணி கீரையை பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு சேர்த்து வேகவைத்து, மசியல் செய்து சாப்பிட்டால், ரத்த விருத்தி ஏற்படும்.
➤பொன்னாங்கண்ணி இலையை கசக்கி நுகர்ந்து பார்த்தால் தலைவலி, தலைச்சுற்றல் குணமாகும். SHARE IT.

News September 5, 2025

எப்படி இருக்கிறது மதராஸி.. ரசிகர்கள் சொல்றத கேளுங்க!

image

‘மதராஸி’ படத்தின் பர்ஸ்ட் ஷோவை வெளிமாநிலங்களில் பார்த்த ரசிகர்கள் சொல்வதை கேளுங்க.
*SK படத்தில் காதல், காமெடி, ஆக்சன் என அசத்தினார்.
*வித்யூத் பக்கா வில்லன் மெட்டீரியல்.
*SK- வித்யூத் ஜம்வால் ஆக்‌ஷன் காட்சிகள் அதகளம்.
*சில இடங்களில் படம் தொய்வாக இருந்தாலும், AR முருகதாஸ் நேர்த்தியாக திரைக்கதை அமைத்துள்ளார். *அனிருத்தின் இசை படத்தின் ப்ளஸ். முழு ரிவ்யூவிற்காக Stay tuned with Way2News.

News September 5, 2025

100 வயதை கடந்து வாழும் இந்தியர்கள் எத்தனை பேர்?

image

‘100 வருஷம் உன் கூட வாழனும்டா’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில், யாருக்குத்தான் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது. இப்படியான வாழ்வைதான், அதாவது 100 ஆண்டுகளைக் கடந்து உலகில் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இதில் இந்தியாவுக்கு 4-வது இடம். ஆம், இந்தியாவில் 37,988 பேர் 100 வயதை கடந்த நிலையில் வாழ்வதாக UN 2025 Projections தரவு கூறுகிறது. 100-வது வயதில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

error: Content is protected !!