News September 5, 2025
மதராஸியை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்: SK

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘மதராஸி’ படம் இன்று ரிலீஸாகிறது. இந்நிலையில், ஒரு முழு Action Entertainer படத்தை கொடுப்பதற்காக எங்களால் (படக்குழு) முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது X பதிவில், ரசிகர்கள் அனைவரும் தங்களின் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார். நீங்க எப்போ படம் பார்க்க போறீங்க?
Similar News
News September 7, 2025
இந்திய டெஸ்ட் அணியில் ஷ்ரேயஸ் ஐயர்?

ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான, 2 Multi-Day போட்டிகளுக்கான இந்திய A அணியின் <<17631676>>கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் <<>>அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2 டெஸ்ட் போட்டிகளில், ஷ்ரேயஸ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய கருண் நாயருக்கு பதில் அவர் அணியில் சேர்க்கப்படலாம். ஷ்ரேயஸ் நல்ல சாய்ஸா?
News September 7, 2025
கட்சியில் இருந்து நீக்கவில்லை.. பின்வாங்கும் இபிஎஸ்

செங்கோட்டையன் உள்ளிட்டோரை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவித்த EPS, ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொதுவாக, கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ‘அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்’ என்றே அதிமுக தலைமை அறிக்கை வெளியிடும். இந்த விவகாரத்தில் ஏன் EPS பின்வாங்குகிறார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News September 7, 2025
EPSஐ வேட்பாளராக ஏற்க முடியாது: TTV திட்டவட்டம்

தன்னை சந்திக்கவே EPS அச்சப்படுவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். EPS-ஐ எதிர்த்து கட்சி தொடங்கிய தான், அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வேன் எனவும் கேள்வி எழுப்பினார். நயினார் தன்னையும், OPS-ஐயும் திட்டமிட்டு அவமதித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். <<17637974>>OPS செங்கோட்டையனை <<>>சந்திப்பதாக கூறிய நிலையில், TTV-யும் அவரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். புதிய கூட்டணி உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.