News September 5, 2025
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் No.1

NIRF தரவரிசை பட்டியலின்படி இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதில் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் 33 கல்லூரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. 32 கல்லூரிகளுடன் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் தேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.
Similar News
News September 8, 2025
தேர்தலையொட்டி மோடி வைக்கும் ஸ்பெஷல் விருந்து

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. NDA சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணி சார்பில் பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி MP-க்களுக்கு PM மோடி இன்று இரவு விருந்து கொடுக்கிறார். அதேபோல், எதிர்க்கட்சி MP-க்களுக்கு கார்கே விருந்து கொடுக்கிறார். ரகசிய வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும்.
News September 8, 2025
தொப்பை குறைய உதவும் யோகாசனம்!

✦வயிறு தசைகளை உறுதியாக்கி, தொப்பை குறைய வசிஸ்தாசனம் உதவும்.
➥தரையில் உள்ளங்கைகளை ஊன்றி, கைகளை நேராக வைத்து, உடலை உயர்த்தி, கால் விரல்களை ஊன்றி, உடலை நேர்கோட்டில் கொண்டுவரவும்.
➥பின் உடலை வலது புறம் திருப்பி, வலது கையால் ஊன்றி, இடது கையை மேலே தூக்கவும். கால்களை ஒன்றின் மீது ஒன்று வைக்கவும்.
➥தலையை மேலே தூக்கிய கையை நோக்கி பார்த்து, 20 விநாடிகள் தங்கி பிறகு பக்கத்தை மாற்றவும். SHARE IT.
News September 8, 2025
அதிமுக அணிகள் இணைய வாய்ப்பு இல்லை: பெ.சண்முகம்

பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் மீண்டும் ஒன்றாக இணைய வாய்ப்பே கிடையாது என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவை துண்டு துண்டாக ஆக்கி அதன் மீது சவாரி செய்யவே பாஜக முயல்வதாக குற்றம்சாட்டிய அவர், அவர்களிடம்(BJP) சிக்கியவர்களால் மீள முடியாது எனவும் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை EPS கடுமையாக சாடி வருவது கவனிக்கத்தக்கது. உங்கள் கருத்து என்ன?