News September 5, 2025
கடையம் அருகே திருமண வீட்டில் கொலையா?

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 8, 2025
தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் (06061) புதன்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை அடைகிறது. மறுமார்க்கமாக (06062) வியாழக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்தை அடைகிறது. ஏசி, ஸ்லீப்பர், பொதுப்பெட்டிகள் உள்ள இந்த ரயிலை நிரந்தரமாக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க
News September 8, 2025
தென்காசி: மின்தடை செய்யப்படும் இடங்கள்

நாளை(செப்.9) தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை, சக்தி நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர், மாறாந்தை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை இருக்கும். செப்.10ம் தேதி கரிவலம்வந்தநல்லூர், பனையூர், கோமதிமுத்துபுரம், இடையான்குளம், சென்னிகுளம், காரிசாத்தான், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பராமரிப்பு பணிக்காக இந்த மின்தடை அறிவிப்பு. *ஷேர்
News September 8, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.7) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.