News September 5, 2025
தாம்பரத்துடன் நிறுத்தப்படும் ரயில்கள் அறிவிப்பு

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் காரணமாக, செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10 வரை சில விரைவு ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மலைக்கோட்டை, மதுரை பாண்டியன், திருச்சி சோழன், ராமேஸ்வரம் சேது மற்றும் ராமேஸ்வரம் போட் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News September 8, 2025
BREAKING: தாம்பரம் அருகே விபத்து 2 பேர் பலி

தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அவரது தோழி அபிமணி என்பது தெரியவந்தது. இவ்விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News September 8, 2025
செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

செங்கல்பட்டு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News September 8, 2025
செங்கல்பட்டு: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

செங்கல்பட்டு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்து SMS வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க)