News April 10, 2024
OTT-க்கு வரும் ‘சைரன்’

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’ திரைப்படம், வரும் 19ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய இப்படம், கடந்த பிப்.16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் OTT-இல் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Similar News
News November 12, 2025
‘மந்தாகினி’ ஆக மிரட்டும் பிரியங்கா சோப்ரா

பிரமாண்டத்திற்கு பெயர்போன ராஜமெளலியின் அடுத்த படைப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. PAN இந்தியா படமாக உருவாகியுள்ள GLOBETROTTER-ல் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக மகேஷ் பாபுவின் கதாபாத்திர அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் 15-ம் தேதி படத்தின் டைட்டில் ரிலீஸ் நிகழ்வு, ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
News November 12, 2025
சந்தேக வளையத்திற்குள் Al-Falah பல்கலைக்கழகம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், ஹரியானாவின் Al-Falah பல்கலை. சந்தேக வளையத்திற்குள் சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாஹீன் சயீத், முஸம்மில் ஷகீல் உள்ளிட்ட பல டாக்டர்கள் Al-Falah பல்கலை.-யில் பணியாற்றியுள்ளனர். தீவிரவாத நடவடிக்கைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் <<18268646>>நிசார்-உல்-ஹசன்<<>> எப்படி பல்கலை.-யில் பணி நியமனம் செய்யப்பட்டார் என்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
News November 12, 2025
சென்னை – விஜயவாடா வந்தே பாரத் நரசபூர் வரை நீட்டிப்பு

சென்னை – விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்று முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 5:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில்(20677), ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா வழியாக பிற்பகல் 2:10 மணிக்கு நரசபூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் 2:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(20678) இரவு 11:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.


