News September 5, 2025
காவல் நிலைய மரணங்கள்.. SC எடுத்த முடிவு

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் CCTV பொறுத்தப்படாததை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 11 காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியதாக வெளியான அறிக்கையின்படி சுப்ரீம் கோர்ட் இந்த முடிவை எடுத்திருக்கிறது. 2020-ல் ஒரு வழக்கின் விசாரணையில் சுப்ரீம் கோர்ட் எல்லா காவல் நிலையங்களில் CCTV பொறுத்த உத்தரவிட்டது. எனினும் பல காவல் நிலையங்களில் இது நடைமுறையில் இல்லை.
Similar News
News September 5, 2025
மகளிர் உலகக் கோப்பை டிக்கெட் ₹100 மட்டுமே!

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் செப்.30-ல் தொடங்குகிறது. இந்நிலையில், இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத வகையில், லீக் ஆட்டங்களுக்கு டிக்கெட் விலை ₹100 என மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டை காண வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீங்களும் டிக்கெட் புக் செய்ய இங்கே <
News September 5, 2025
முகம் பொலிவுடன் இருக்க செய்யும் ‘வஜ்ராசனம்’

*வஜ்ரம் என்றால் வைரம். உடலுக்கு வைரம் போல உறுதியைத் தரக்கூடிய ஆசனம் இது. உடலின் மேல்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்பதால், முகம் பொலிவுடன் இருக்கும்.
*தரையில் முட்டிபோட்டு, கால்களின் மீது உட்காரவும்.
*கைகளை முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
*முதுகை நேராக வைத்து, மூச்சை உள்ளிழுத்து பின் வெளியேற்றுங்கள். *கவனம் முழுவதும் சுவாசத்தில் இருக்க வேண்டும். SHARE IT.
News September 5, 2025
தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி?

DMK+, ADMK+, NTK, TVK என நான்குமுனை போட்டியாக 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணியோ, ‘இன்னும் 4 மாசம்தான், பொறுத்துக்கோங்க, அப்புறம் நம்ம ஆட்சிதான். நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்’ என கூறியுள்ளார். OPS, TTV தற்போது தனியாக உள்ள நிலையில், தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் யாருக்கு சாதகம்?