News April 10, 2024
வேலூர்: ஏ.சி.சண்முகம் முக்கிய அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்.10) பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஏ.சி.சண்முகம், மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் கோட்டை மைதானத்தை இஸ்லாமிய பெருமக்கள் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் திருநாளை முன்னிட்டு தொழுகைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். இது இஸ்லாமிய மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Similar News
News November 5, 2025
வேலூர் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News November 5, 2025
வேலூர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அச்சம்!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சாலைகளில், மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் பல வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News November 5, 2025
வேலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆன்சி வர்கீஸ் (24). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இவரிடம் கடந்த 2023-ம் ஆண்டு பள்ளிக்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்ற வாலிபர் செல்போன், பணம் பறித்து சென்றார். இதுதொடர்பான வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சிதா நேற்று (நவ.04) சந்தோஷ்க்கு 3ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


