News September 4, 2025
உள்ளத்தை கொள்ளையடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

அழகால் வசீகரிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பச்சை நிறத்தில் சேலை உடுத்தி விதவிதமான போட்டோஸ் எடுத்து இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துள்ளார். அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய இவர், தற்போது ‘BRO CODE’, ‘ஆர்யன்’ படங்களில் நடித்து வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?
Similar News
News September 7, 2025
பெற்றோருடன் நேரம் செலவிட இனி அரசு விடுமுறை

அசாமில், பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் ‘Matri Pitri Vandana’ திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி நவ.14, 15-ம் தேதிகளில் ஊழியர்கள், தங்கள் சிறப்பு விடுமுறையை விதிகளுக்கு உள்பட்டு விண்ணப்பித்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் குடும்பத்துடனான பிணைப்பை அதிகரித்து, ஊழியர்கள் மன தெளிவுடன் பணிபுரிவர் என கூறப்படுகிறது. இதை தமிழகத்திலும் கொண்டு வரலாமா?
News September 7, 2025
மூலிகை: நன்மைகள் கொட்டி கிடக்கும் கரிசலாங்கண்ணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*கரிசலாங்கண்ணியை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*நரம்பு மண்டலத்தில் உள்ள கபால நீரும், பித்தப்பையில் உள்ள கெட்ட பித்தத்தையும் இது வெளியேற்றும்.
*குழந்தைகளுக்கு 2 சொட்டு கரிசலாங்கண்ணிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும்.
*மஞ்சள் காமாலை போன்ற அனைத்து வகை காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்து. SHARE IT.
News September 7, 2025
FLASH: சிக்கன் விலை உயர்ந்தது

நாமக்கல் மொத்த கொள்முதல் விலையில் இன்று(செப்.7) சிக்கன் கிலோவுக்கு ₹2 உயர்ந்துள்ளது. இதனால், கறிக்கோழி 1 கிலோ ₹100-க்கும், முட்டைக்கோழி ₹107-க்கும் விற்பனையாகிறது. முட்டையை பொறுத்தவரையில் கடந்த வார விலையான ₹5.15 ஆகவே நீடிக்கிறது. சென்னையில் சில்லறை விலையில் உயிருடன் கறிக்கோழி 1 கிலோ ₹130-க்கும், தோல் நீக்கிய கோழி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?