News September 4, 2025
காஞ்சியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தில் புத்தகம் எழுதும் இயக்கம் சார்பில் “எழுதுக” எனும் நிகழ்ச்சி வரும் 6ம் தேதி சனி காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன். இயக்குனர் பள்ளி கல்வித்துறை முனைவர் கண்ணப்பன் மற்றும் தலைமை விருந்தினராக. முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொள்கிறார்.
Similar News
News September 7, 2025
காஞ்சிபுரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

காஞ்சிபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News September 7, 2025
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நாளை (செப்.8) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
News September 7, 2025
காஞ்சிபுரம் கோயில்கள் நடை அடைப்பு

சந்திர கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு துவங்கி அதிகாலை 1.26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை 9 மணி முதல் இரவு வரை நடை அடைக்கப்படுகிறது. இதேபோல் ஏகாம்பரநாதர் கோயிலில் மாலை 6 மணிக்கும், குமரகோட்டம் கோயிலில் இன்று மதியம் 1 மணிக்கும், உலகளந்த பெருமாள் கோயிலில் மதியம் 1 மணிக்கும், கச்சபேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6.30க்கும் நடைசாற்றப்படுகிறது. (SHARE)