News April 10, 2024
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஐடி ரெய்டு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்துவருபவர் ஜெயக்குமார், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) காலை முதல் இவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

திருவள்ளூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News February 8, 2026
திருவள்ளூர் அருகே நூதன திருட்டு… உஷார் மக்களே

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவரிடம் மர்ம நபர்கள் இரண்டு பேர் நாங்கள் ஆந்திர மாநில டாக்டர்கள் மனநிலை குன்றியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறித்து சென்றனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். *எனவே உஷாரா இருங்க மக்களே*
News February 8, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.


