News September 4, 2025
விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு ‘நோ’: ஐஸ்வர்யா

விஜய்யே அழைத்தாலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் நகைக்கடை விழாவில் பங்கேற்ற அவரிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவருக்கான வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தனக்கு அரசியலில் நாட்டம் இல்லை என்றார். அண்மையில் நடிகை அம்பிகா, தான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 7, 2025
பிரபல நடிகை அனுஷ்கா மோனி கைது

மும்பையில் பாலியல் புகாரில் பெங்காலி நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ்(41) கைது செய்யப்பட்டுள்ளார். நடிகைகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் கையும் களவுமாக அவர் சிக்கியுள்ளார். வாடிக்கையாளர் போன்று 2 பேரை அனுப்பி, அவர்களிடம் பணம் பெற வந்த நடிகை அனுஷ்காவை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும், அவரிடம் சிக்கி இருந்த நடிகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
சீன அதிபரை சந்திக்கும் டிரம்ப்..!

தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் டிரம்ப் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சீனாவின் பிடியில் இந்தியா, ரஷ்யா சென்றுவிட்டதாக டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில், இச்சந்திப்பு நடைபெறுவதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
News September 7, 2025
மீனுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடவே கூடாது!

மீன் சாப்பிடுவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளையில், மீனுடன் சேர்த்து சில உணவு பொருள்களை சாப்பிடுவது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். அந்தவகையில், மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுப் பொருள்களை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா பட்டியலிட்டுள்ளார். மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.