News September 4, 2025
வேலூர் விசாரணை கைதி மருத்துவமனையில் பலி

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருட்டு வழக்கில் குமார் (50) என்பவர் கைதாகி விசாரணை கைதியாக கடந்த ஜூலை முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் வயிற்று வலி காரணமாக வேலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமார் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 11, 2025
வேலூர்: லத்தேரி அருகே தீ விபத்து

லத்தேரி அடுத்த செஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் (32). இவர் கார்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய நிலத்தில் பழுது பார்க்கக் கொடுக்கப்பட்ட கார்களை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் 8 கார்கள் சேதமடைந்தது.
News September 11, 2025
வேலூர்: திமுகவில் இருந்து நீக்கம்

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி. இவர் திமுகவிற்கு அவர் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். திமுக கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
News September 11, 2025
வேலூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

வேலூர் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)