News September 4, 2025
சேலம் மாநகர இரவு நேர காவல் அதிகாரிகள்.

சேலம் மாநகர இரவு நேர காவல் அதிகாரிகளின் விவரம் காவல் உதவி ஆணையாளர் வி சரவணன் தெரிவித்துள்ளார், சேலம் டவுன்சாரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கான காவல் அதிகாரிகளும் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அரை தொலைபேசியில் 100 0427 221 0002 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News September 5, 2025
சேலம்: BE,B.TECH முடித்தவர்கள் சூப்பர் வேலை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாகவுள்ள 976 ஜூனியர் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு BE,B.TECH முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.40000 முதல் ரூ.140000 வரை சம்பளம் வழங்கப்படும். 27.09.2025 தேதிக்குள் https://www.aai.aero/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். இதனை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 5, 2025
சேலம்: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக செல்லும் மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட்- மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20671/20672) கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், புதிய நடைமுறை வரும் செப்.11- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News September 5, 2025
கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கு 4,000 பேர் விண்ணப்பம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் அக்.11- ஆம் தேதி 4 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.