News September 4, 2025
BREAKING: தீபாவளி பரிசு அறிவித்த பிரதமர் மோடி

தீபாவளி, சாத் பண்டிகைக்கு இரட்டை பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளதாக PM மோடி கூறியுள்ளார். டெல்லியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு <<17608536>>GST சீர்திருத்தம்<<>> உதவிகரமாக இருக்கும் என்றார். மேலும், GST-க்கு முன்பு காங்., ஆட்சியில் மருந்துகள், காப்பீடு, சமையல் பொருள்களுக்கு ஏராளமான வரி விதிக்கப்பட்டதாக கடுமையாக சாடியுள்ளார். உங்கள் கருத்து?
Similar News
News April 3, 2026
BREAKING: நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் NDA கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் சற்று முன் அறிவிக்கப்பட்டனர். அதில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளராக S.P.பாலகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
News April 3, 2026
விஜய்க்கு வாக்களிப்பேன்.. பிரபல நடிகை அறிவித்தார்

வரும் தேர்தலில் விஜய்க்கு வாக்களிப்பேன் என நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே விஜய்யை பற்றி பேசுவதாகவும், இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்காத போதும் கோடிக் கணக்கான மக்கள் விஜய்யுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் தேர்தலில் அனைவரும் அவருக்கு வாக்களிக்க காத்திருக்கின்றனர்; ஒரு ரசிகையாக தானும் காத்திருக்கிறேன் எனவும் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
News April 3, 2026
இந்தி கற்று EPS கவர்னர் ஆகிவிடுவார்: கனிமொழி

தேர்தலுக்கு பின் இந்தி கற்றுக்கொண்டு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக EPS சென்றுவிடுவார் என கனிமொழி விமர்சித்துள்ளார். எந்த மாநிலம் பிடித்திருக்கிறது என தேர்வு செய்து வைத்துக்கொள்ளுங்கள் என EPS-க்கு கூறிய அவர், நிச்சயம் கவர்னர் வாய்ப்பை அமித்ஷா தருவார் என்றும் கூறியுள்ளார். மேலும், பாஜவுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பது அதிமுகவுக்கு தெரியவில்லை எனவும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


