News September 4, 2025

நீர் நிலையை ஆக்கிரமித்து காவல் நிலையம்

image

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து புதியதாக காவல் நிலையம் கட்டப்பட்டது. இதனால் நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீர் நிலையை ஆக்கிரமித்த காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News September 8, 2025

தாம்பரம் திருச்சி இடையே மின்சார ரயில்கள் இயக்கம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஆன்லைன் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், தாம்பரம் – திருச்சி இடையே இரண்டு மின்சார ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. வரும் அக்.20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால், ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நேரடியாக முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்த பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக இருக்கும்.

News September 7, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!