News September 4, 2025
கார்களின் விலை எவ்வளவு குறையும்?

சில கார்களின் மீதான ஜிஎஸ்டி வரி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன்படி Maruti swift ₹ 88ஆயிரமும், Tata Nexon ₹ 1.05லட்சமும், Maruti Baleno ₹ 85ஆயிரமும், Mahindra 3XO ₹ 95ஆயிரமும், Hyundai Venue ₹ 79ஆயிரமும், Tata Tiago ₹ 50ஆயிரமும், Kia Sonet ₹ 90ஆயிரமும், Tata Altroz ₹ 82ஆயிரமும், Hyundai i20 ₹ 75ஆயிரமும், Honda Amaze ₹ 85ஆயிரம் வரையும் விலை குறையலாம்.
Similar News
News April 10, 2026
தமிழ் புத்தாண்டு விடுமுறை.. 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. இன்று (ஏப்.10) முதல் 5 நாள்களுக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 2,119 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC <
News April 10, 2026
EPS ஒரு வியாபாரி: கிருஷ்ணசாமி

ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி, ஆனால் EPS ஒரு வியாபாரி என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக கூறிய அவர், அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என அதிமுக நினைத்ததாகவும் பேசியுள்ளார். இம்முறை EPS-க்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNEletion2026<<>>
News April 10, 2026
அத்தியாயத்தை முடித்த நிதிஷ்..!

பிஹார் CM நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா MP-யாக பதவியேற்று, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். கால் நூற்றாண்டு காலம் பிஹாரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றதால், அவரது மகன் நிஷாந்த் குமாரை மாநில அரசியலில் இறக்கியுள்ளார். ஏப்.14-ல் நிதிஷ் தனது CM பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.


