News September 4, 2025

காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

image

மார்ச் 2013 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலத்தில் தேர்வு எழுதிய 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அழித்திட நடவடிக்கை செய்து உள்ளோம். இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் சம்பந்தப்பட்ட தனித் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் 02.12.2025-க்குள் காஞ்சிபுரம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகலாம்.

Similar News

News September 7, 2025

காஞ்சிபுரம் கோயில்கள் நடை அடைப்பு

image

சந்திர கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு துவங்கி அதிகாலை 1.26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை 9 மணி முதல் இரவு வரை நடை அடைக்கப்படுகிறது. இதேபோல் ஏகாம்பரநாதர் கோயிலில் மாலை 6 மணிக்கும், குமரகோட்டம் கோயிலில் இன்று மதியம் 1 மணிக்கும், உலகளந்த பெருமாள் கோயிலில் மதியம் 1 மணிக்கும், கச்சபேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6.30க்கும் நடைசாற்றப்படுகிறது. (SHARE)

News September 6, 2025

காஞ்சிபுரத்தில் தொழில் சிறக்க இங்கு போங்க!

image

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவாலயம், முனிவர்கள், தேவர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தீர்ப்பதற்காக, இறைவன் இங்கு தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில், வழக்குகளில் சிக்கியவர்களும், தொழில் மற்றும் பதவியில் உயர்வு வேண்டுவோரும் 16 வாரங்கள் தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது. பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் இக்கோயிலில் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2025

காஞ்சிபுரம் மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<>முதல்வரின் <<>>முகவரி” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!