News September 4, 2025
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளர் ஒருவரை திமுகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டப்படி தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News September 8, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.07) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
விழுப்புரம்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

விழுப்புரம் மக்களே.. இந்த செப். மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) ஷேர் பண்ணுங்க
News September 7, 2025
தைலாபுரம்: பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், இன்று (செப். 7) சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள், கௌரவத் தலைவர் மணி மற்றும் ஊடகப் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.