News April 10, 2024
தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஜடேஜா, தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற தோனியின் சாதனையை ஜடேஜா சமன் செய்தார். இருவரும் தலா 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.
Similar News
News February 10, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்… திமுக அதிர்ச்சி

திமுக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவோ கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. நெல்லை, குமரி பகுதிகளில் வலுவாக இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சியை திமுக கூட்டணிக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R.தனபாலன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
மதுரையில் 10 தொகுதிகளில் வெற்றிபெற பிடிஆர் ஐடியா

2026-ல் மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றிபெற, கட்சி தொண்டர்களுக்கு அமைச்சர் பிடிஆர் அட்வைஸ் கொடுத்துள்ளார். தேர்தல் பரப்புரை சிறப்பாக செய்தால் மட்டும் வெற்றிக்கு போதும் என நினைக்கக்கூடாது; வாக்கெடுப்பு அன்று தான் மிக தெளிவாக பணி செய்ய வேண்டும். பரப்புரை எந்த அளவுக்கு முக்கியமோ, வாக்கெடுப்பு அன்று கவனமாக செயல்பட்டால் 10 தொகுதியிலும் எளிதாக வெற்றிபெற முடியும் என கூறியுள்ளார்.
News February 10, 2026
திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளியேறும்: இன்பதுரை

காங்கிரஸ் கட்சியை திமுக வேஸ்ட் லக்கேஜ் என முடிவு செய்துவிட்டதாக அதிமுக MP இன்பதுரை தெரிவித்துள்ளார். இல்லையென்றால் காங்கிரசை விமர்சிப்பது போன்ற பராசக்தி திரைப்படத்தை திமுக வெளியிடுமா என கேள்வி எழுப்பிய அவர், திமுகவுக்கு காங்கிரஸ் உடனான உறவு கசந்துவிட்டது என விமர்சித்தார். மேலும், கூட்டணியில் இருந்து காங்., தானாகவே வெளியேற வேண்டும் என திமுக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


