News September 4, 2025

சிறுநீரகத்தை வலிமையாக்க வேண்டுமா?

image

நம் உடலில் உள்ள கழிவுகள், நச்சுகளை அகற்றுவதில் சிறுநீரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறுநீரகங்களின் திறனை அதிகரித்து, அவற்றை வலிமையாக்க நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அன்னாசிப்பழம், குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, காளான், முட்டைக்கோஸ், ஆப்பிள், சிவப்பு திராட்சை, முட்டை ஆகிய உணவுகள் இதற்கு உதவும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும்.

Similar News

News March 14, 2026

குழந்தைகளுக்கு தமிழ் சூட்ட வைக்க இணையதள பக்கம்!

image

குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டுவதற்காகவே TN அரசு புதிய இணைய பக்கத்தை தொடங்கியுள்ளது. <<16265547>>CM ஸ்டாலின் உத்தரவின் பேரில் <<>>தமிழ் இணைய கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் உருவான இந்த இணையதள பக்கத்தை அமைச்சர் PTR தொடங்கி வைத்துள்ளார். அதன்படி தொடங்கப்பட்டுள்ள <>http://tamildigitallibrary.tn/tamilnames<<>> என்ற இணைய பக்கத்தில் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் மற்றும் அதற்கான பொருள் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது.

News March 14, 2026

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு

image

ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக ஊக்கத்தொகை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கியிருந்தது. இம்முறை ஒரு குடும்ப அட்டைக்கு ₹3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

News March 14, 2026

NR காங்கிரஸ் – பாஜக தொகுதி பங்கீடு இறுதியானது!

image

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக – NR காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி NR காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதை உறுதி செய்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கூட்டணி கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளை பிரித்து கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!