News September 4, 2025
காஞ்சிபுரம்: தீபம் ஏற்றி வழிபட்டால் சிறந்த பலன்

ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலத்தில், பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இது, எம்பார் சுவாமி அவதார தலமாகும். கண்ணில் குறை பாடு உள்ளோர், இந்தக் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 7, 2025
காஞ்சிபுரம் கோயில்கள் நடை அடைப்பு

சந்திர கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு துவங்கி அதிகாலை 1.26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை 9 மணி முதல் இரவு வரை நடை அடைக்கப்படுகிறது. இதேபோல் ஏகாம்பரநாதர் கோயிலில் மாலை 6 மணிக்கும், குமரகோட்டம் கோயிலில் இன்று மதியம் 1 மணிக்கும், உலகளந்த பெருமாள் கோயிலில் மதியம் 1 மணிக்கும், கச்சபேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6.30க்கும் நடைசாற்றப்படுகிறது. (SHARE)
News September 6, 2025
காஞ்சிபுரத்தில் தொழில் சிறக்க இங்கு போங்க!

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவாலயம், முனிவர்கள், தேவர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தீர்ப்பதற்காக, இறைவன் இங்கு தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில், வழக்குகளில் சிக்கியவர்களும், தொழில் மற்றும் பதவியில் உயர்வு வேண்டுவோரும் 16 வாரங்கள் தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது. பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் இக்கோயிலில் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 6, 2025
காஞ்சிபுரம் மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<