News September 4, 2025
JUST IN: கோவையில் அதிரடி விலை உயர்வு

கோவை: சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. அதன்படி டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். டீ, காபி பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 7, 2025
கோவை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

கோவை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம இதை SHARE பண்ணுங்க!
News September 7, 2025
கோவையில் ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

கோவை வேளாண் இணை இயக்குனர் கூறுகையில், “கோவையில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இம்மையங்களை சிறப்பாக நடத்த வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். ஒப்புதல் பெற்றதும், மானிய உதவிக்காக <
News September 7, 2025
கோவை: இந்த மெமு ரயில் மட்டும் ரத்து!

சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போத்தனூரில் இருந்து இன்று (செப்.7) காலை 9.40 மணிக்கு புறப்படும் போத்தனூா் – மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.