News September 4, 2025
GST மாற்றத்தால் ஏழைகளுக்கு பயன்: ராமதாஸ் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையை ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்ததன் மூலம், ஏழை பாட்டாளிகள் மீதான பணச்சுமை குறைவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக மத்திய அரசை பாராட்டலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 544 ▶குறள்: குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. ▶பொருள்: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
News December 9, 2025
₹2.43 கோடியை வேண்டாம் என்று சொன்ன வீராங்கனை

ஓய்வு பெற்ற ஃபிரெஞ்சு டென்னிஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (32), தனது யூடியூப் சேனலில் டென்னிஸ் வீரர்களின் பேட்டிகளை வெளியிட்டு வருகிறார். அவரது சேனலுக்கு, சூதாட்ட நிறுவனம் ஒன்று ₹2.43 கோடி ஸ்பான்சர்ஷிப் செய்ய முன்வந்துள்ளது. ஆனால், அதை மறுத்து, பணத்தை விட தனது நோக்கம் மதிப்புமிக்கது என தெரிவித்துள்ளார். மேலும், டென்னிஸ் சார்ந்த ஆரோக்கியமான வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
News December 9, 2025
‘வந்தே மாதரம்’ இஸ்லாமுக்கு எதிரானது அல்ல: ராஜ்நாத் சிங்

‘வந்தே மாதரம்’ மற்றும் அப்பாடலை கொண்டுள்ள ‘ஆனந்த் மடம்’ நாவல், இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அல்ல என ராஜ்நாத் சித் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஆங்கிலேய அழுத்தத்தின் கீழ் அன்றைய வங்காள நவாப் மக்களை சுரண்டினார். மக்களின் வலியையே அந்த நாவல் பிரதிபலித்தது. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு அது அரசால் குறிவைக்கப்பட்டு, வந்தே மாதரத்தின் ஆன்மா நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


