News September 4, 2025

பொள்ளாச்சிக்கு சீமான் திடீர் வருகை!

image

பொள்ளாச்சி தாலுக்கா சந்தேகவுண்டன்பாளையதில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சினிமா கலை இயக்குனர் பிரபாகரன் மகன் திருமண நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்.4) நேரில் வந்து கலந்து கொண்டு வாழ்த்தினார். அப்போது, கட்சி நிர்வாகிகள் சிலரை சந்தித்தார். பின்னர் கோயம்புத்தூர் மாநகரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.

Similar News

News March 10, 2026

மருதமலை கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு!

image

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (10.03.2026) முதல் செல்போன் பயன்படுத்த கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜகோபுரம் முதல் அனைத்து சன்னதிகள் மற்றும் வளாகம் முழுவதும் செல்போனில் பேசவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. பக்தர்கள் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, அமைதியான முறையில் தரிசனம் செய்ய ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News March 10, 2026

SSLC பொதுத்தேர்வு: 38,390 மாணவர்கள் எழுதுகின்றனர்

image

கோவையில் மார்ச் 11-ல் தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 509 பள்ளிகளைச் சேர்ந்த 38,390 மாணவர்கள் 159 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க 250 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 949 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News March 10, 2026

கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று துவங்கியது

image

ஈரான் -இஸ்ரேல் போர் காரணமாக கோவை ஷார்ஜா மற்றும் கோவை- அபுதாபி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்.
கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3:10 மணிக்கு புறப்பட்ட விமானம் கோவை வந்தடைந்தது. அதேபோல அதிகாலை 3.50 மணிக்கு கோவையில் இருந்து ஒரு விமானம் ஷார்ஜா புறப்பட்டு சென்றது.

error: Content is protected !!