News September 4, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் டேவிட் மனோகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி., சாலையில் மழைக்காலங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சாலையோர கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, குப்பைகள் கொட்டுவதை தடுக்க தவறியது உள்ளிட்ட காரணங்களை கூறியிருந்தார். நேற்று (செப். 3) மனுவை விசாரித்த ஐகோர்ட் செங்கல்பட்டு கலெக்டர், தலைமை செயலாளர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
Similar News
News September 8, 2025
தாம்பரம் திருச்சி இடையே மின்சார ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஆன்லைன் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், தாம்பரம் – திருச்சி இடையே இரண்டு மின்சார ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. வரும் அக்.20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால், ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நேரடியாக முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்த பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக இருக்கும்.
News September 7, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.