News September 4, 2025
பௌர்ணமியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பௌர்ணமிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் அவற்றையும் அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 8, 2025
தி.மலை: கஞ்சா தகராறு – இளைஞர் கொலை

தி.மலை மாவட்டம் செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அப்சல் (22) கஞ்சா விற்பனை தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இரு சிறார்கள், கல்லூரி மாணவர் உட்பட 16 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிறார்கள் கடலூர் சீர்திருத்தப் பள்ளிக்கும், மற்றவர்கள் வேலூர் மத்திய சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.
News September 8, 2025
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

2025 ஆம் ஆண்டின் 3-ம் காலாண்டிற்கான, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (தாக்அதாலத்), திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அஞ்சல் துறை சார்ந்த தங்கள் குறைகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக 12.9.2025 க்குள் அனுப்பி வைக்கலாம் என தி.மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
தி.மலையில் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி!

தி.மலை மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டி வருகிற 9-ம் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி 10-ம் தேதியன்றும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.