News September 4, 2025
திருச்சி மாவட்ட சி.இ.ஓ முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று அரசு, அரசு உதவி பெறும் தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ப.ஆசிரியர்கள், இ.நி.ஆசிரியர்கள் சி.ஆசிரியர்கள் மொத்த எண்ணிக்கை டேட் Qualified, tobe Qualified & 01.09.2025 முதல் 31.08.2030 வரை ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரம் https://forms.gle/kh5scடுh9SDH24F36 என்ற லிங்கில் பதிவிட கூறியுள்ளார்.
Similar News
News September 8, 2025
திருச்சி: வாழவந்தி அரவண்காடு அருகே பெண் பலி

முசிறி அருகே சிந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி அம்மாள் (45) இவர் இன்று காலையில் தனது மொபட்டில் முசிறி துறையூர சாலையில் வாளவந்தி அரவங்காடு அருகே வந்தபோது எந்தவித செய்கையும் காட்டாமல் திரும்பி உள்ளார். அப்போது குளித்தலை உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார் (24) ஓட்டி வந்த கார் மொபட் மீது மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.
News September 8, 2025
திருச்சியில் சுற்றுப் பயணத்தை தொடங்கும் விஜய்

தவெக தலைவர் விஜய் வரும் செப்.,13-ம் தேதி திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் அதே நாளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் குன்னம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஓரிரு நாளில் இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
News September 7, 2025
திருச்சி: பெல் நிறுவனத்தில் சேர வாய்ப்பு

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <