News September 4, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மீலாது நபியை முன்னிட்டு, நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை (இன்று இரவு 10 மணி முதல் 6-ம் தேதி மதியம் 12 மணி வரை) மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 7, ஆவணி 22 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 8:30 AM – 9:00 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
News September 7, 2025
US Open: ஃபைனலில் சபலெங்கா – அனிசிமோவா மோதல்

US Open Tennis மகளிர் ஒற்றையர் பிரிவு ஃபைனலுக்கு அரினா சபலெங்கா, அமண்டா அனிசிமோவா முன்னேறியுள்ளனர். இப்போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. முன்னதாக, ஜெசிகா பெகுலாக்கு எதிரான விளையாட்டில் 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வென்று சபலெங்கா ஃபைனலுக்குள் நுழைந்தார். அதேபோல், ஜப்பானின் நவாமி ஒசாகாவை 6-7, 7-6, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அமண்டா ஃபைனலுக்குள் சென்றுள்ளார்.
News September 7, 2025
ஜனாதிபதி உடன் PM மோடி சந்திப்பு

ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி முர்முவை PM மோடி நேரில் சந்தித்தார். அப்போது, தான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்போது நடைபெற்ற நிகழ்வுகளை மோடி முர்முவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு PM சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், AI உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.