News September 4, 2025
BREAKING: சென்னை ஐஐடி முதலிடம்

மத்திய கல்வி அமைச்சகம் 2025-ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி 7-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும், அரசு பல்கலைக்கழங்களுக்கான தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது. (SHARE பண்ணுங்க)
Similar News
News March 11, 2026
JUST IN: சென்னையில் ஹோட்டல்கள் மூடல்!

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள், டீ கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஹோட்டல்களை நம்பி வாழும் இளைஞர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News March 11, 2026
சென்னை: கணவரை படுகொலை செய்த இளம்பெண்!

ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39), மனைவி மகேஸ்வரி(29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் போதையில் வந்த அவர், மகேஸ்வரியின் தாலியை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்தவர், அருகே இருந்த கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில், ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மகேஸ்வரியை கைது செய்த போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
News March 11, 2026
மதுரவாயலில் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது!

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், தனது மகன், மகளுடன் மார்ச் 8ம் தேதி மதுரவாயல் டேனியல் தாமஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின், சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றார். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் சுராஜா பத்ரா (24), நேற்று கைது செய்தனர்.


