News September 4, 2025
டிடிவி கருத்துக்கு பதிலளிக்காத செங்கோட்டையன்

பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகளை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், ஜெ., தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டு, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி நேற்று அறிவித்தார். இந்நிலையில், அவரின் கருத்துக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த செங்கோட்டையன், TTV மனதில் எதை வைத்து அப்படி சொல்கிறார் என எனக்கு தெரியாது என கூறிவிட்டு காரில் வேகமாக சென்றுவிட்டார்.
Similar News
News September 6, 2025
FIDE Grand Swiss: டிராவில் முடித்த குகேஷ்

உஜ்பெகிஸ்தானில் FIDE Grand Swiss 2025 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஓபன் பிரிவில் இந்தியாவின் டி குகேஷ், துருக்கியின் யாகிஷ் கான் எர்டோக்மஸ் உடனான விளையாட்டை டிராவில் முடித்தார். அதேநேரம், ஹாலந்தின் எலின் ராபர்ஸ் உடனான 2-வது சுற்றில் வைஷாலி வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, FIDE கொடியுடன் விளையாடிய இவான் ஜெலன்ஸ்கியை தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
News September 6, 2025
விஜய் களத்திற்கு வந்தபின் இது நடக்கும்: அண்ணாமலை

தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என பாஜகவின் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விஜய் போன்றவர்கள் களத்திற்கு வந்த பிறகு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அண்ணாமலை அண்மையில் கூறி இருந்தார். விஜய் குறித்த அவரது கருத்தை எப்படி பார்க்குறீங்க?
News September 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க