News September 4, 2025

கள்ளக்குறிச்சி: லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News September 7, 2025

கள்ளக்குறிச்சியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (செப்.,6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

கள்ளக்குறிச்சி மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<>முதல்வரின் <<>>முகவரி” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News September 6, 2025

கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட சார்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சிக்கு https://iei.tahdco.com/gel_reg.php என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.

error: Content is protected !!