News September 4, 2025
தஞ்சையில் கூட்டுறவு வங்கிகளில் கடன் தீர்வு திட்டம்

தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் 2022, டிசம்பா் 31ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 23 க்குள் கூட்டுறவு சங்கங்களை அணுகி பயன்பெறுமாறு தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT
Similar News
News September 7, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
தஞ்சை: கோழி பண்ணை அமைக்க மானியம் வேண்டுமா?

தஞ்சை மக்களே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
தஞ்சையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட கழக கட்டிடத்தில், மாவட்ட கழக அவைத்தலைவர் க.நசீர்முகமது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.