News September 4, 2025
நாய்களுடனான உறவை சிதைக்க கூடாது: மிஷ்கின்

தெரு நாய்கள் விவகாரத்தில் 2 பக்கத்தின் பாதிப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். உயிர்வதை கொடுமையானது, அதே சமயம் நாய்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு, உணர்வு ரீதியான என்றும், அதை சிதைத்துவிடாமல் திட்டமிடல் இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
ஆண்மையை இழக்க நேரிடும்: ஆண்களே இதை செய்யாதீங்க!

சாதாரண விஷயம் என்று நீங்கள் அலட்சியமாக செய்யும் சில விஷயங்கள், உங்கள் எதிர்காலத்துக்கே ஆபத்தாக வந்தால் என்ன செய்வீர்கள்? ஆம், கவனமாக இல்லையெனில் உண்ணும் உணவு முதல் அணியும் ஆடை வரை பல பழக்கங்கள் ஆண்மைக் குறைவுக்கு காரணமாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மேலே படங்களாக தொகுத்து வழங்குகிறோம். அவற்றை தவிர்த்து ஆரோக்கிய வாழ்க்கை வாழுங்கள். SHARE IT!
News September 6, 2025
அதிமுக நலனுக்கு நல்லதல்ல: சசிகலா

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்த அவர், இது கட்சியின் நலனுக்கு உகந்தது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
News September 6, 2025
SCIENCE: நாம் கனவுகளை மறப்பது ஏன் தெரியுமா?

இரவில் தூங்கும்போது வந்த கனவை, நாம் காலையில் எழுந்ததும் மறப்பது ஏன் தெரியுமா? ஒரு கனவை உருவாக்குவது, அதை உணர்வது, என 2 வேலைகளையும் நமது மூளையே செய்கிறது. இதனால் கனவில் நாம் கவனிக்காமல் விடும் விஷயங்கள், தானாகவே நமக்கு மறந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதோடு நமக்கு தேவைப்படாது எனக் கருதி, சில தகவல்களை நமது மூளை மறந்துவிடுமாம். நீங்கள் நேற்று கண்ட கனவு ஞாபகம் இருக்கா?