News April 10, 2024
பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடக்கம்

வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது. ஒரு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம், பெயர் மட்டுமே பொருத்த முடியும். இதனால், அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.18ம் தேதி மாலை அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் வகையில் இப்பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
உங்கள் குழந்தை கெட்ட வார்த்தை பேசாம இருக்கணுமா?

➤குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே பெற்றோர் அதை கண்டித்து, திருத்த வேண்டும் ➤அந்த வார்த்தைகளை பேசுவது அவர்களுடைய மதிப்பை குறைக்கும் என எடுத்துரையுங்கள் ➤அவர்கள் முன் நீங்கள் கெட்ட வார்த்தையை பேசாதீங்க ➤தவறுதலாக கெட்ட வார்த்தை பேசினால் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். அவர்களை கண்டிக்கும்போது கோபப்பட வேண்டாம். SHARE.
News November 7, 2025
வைகோவின் மனதை புண்படுத்த விரும்பவில்லை: OPS

2011-ல் அதிமுக கூட்டணிக்கு மதிமுக வராது என ஜெயலலிதாவிடம் OPS பொய் சொன்னதாக <<18224098>>வைகோ குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், ஜெயலலிதா என்ன சொன்னாரோ அதை மட்டுமே தான் செய்ததாக OPS விளக்கம் அளித்துள்ளார். மேலும், வைகோவின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றவர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ அது பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 7, 2025
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

பிக்பாஸ் 9-வது சீசனில் இதுவரை டபுள் எவிக்சன் நடக்கவில்லை. இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறைந்த வாக்குகளை பெற்ற ரம்யாவும் துஷாரும் எவிக்சன் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருவருமே பிக்பாஸ் வீட்டில் பெரியளவில் ஆக்டிவாக இல்லை. அதனால், இவர்களை வெளியேற்றியது சுவாரஸ்யத்தை குறைக்காது என பிக்பாஸ் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


