News September 4, 2025
மருத்துவ தொழில்நுட்ப படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை: அரசு மருத்துவக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டுக்கான மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். இசிஜி, டயாலிசிஸ், சுவாச சிகிச்சை, அவசர சிகிச்சை, கார்டியாக் கேத்தரைசேஷன் லேப் உள்ளிட்ட 10 மருத்துவ தொழில்நுட்பப் பிரிவுகளில் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்றார்.
Similar News
News December 9, 2025
கோவை: ரூ.48,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில், இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை<
News December 9, 2025
கோவை அருகே வாய்க்காலில் பெண் சடலம்!

சுல்தான்பேட்டை போகம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி(35). இவர்களுக்கு கனிஷ்கா ஸ்ரீ (3)என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், மகேஸ்வரி தனது குழந்தையை அழைத்து கொண்டு மாயமானார். இந்நிலையில் மகேஸ்வரியின் சடலம் அவிநாசிபாளையத்தில் பிஏபி வாய்க்காலில் மீட்கப்பட்டுள்ளது. அவர் அழைத்து சென்ற அவரது குழந்தை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (08.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


