News September 4, 2025
தீபாவளி பரிசு கிடைத்துவிட்டது: தமிழிசை

GST வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்த நிலையில், மோடி சொன்னபடி தீபாவளி பரிசை கொடுத்துவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்ட வரி மாற்றம் நோயாளிகளுக்கு இருந்த பெரும் சுமையை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டு முன்னேற்றத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மோடிக்கு, எதிர்க்கட்சியினர் பாராட்டு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 6, 2025
இவைதான் இந்தியாவின் விலை உயர்ந்த விஷயங்கள்!

பொதுவாக உலகளவில் பிராண்டட் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அவை சற்று மாறுபடுகின்றன. இங்கு கழுதைப்பாலில் தொடங்கி தேயிலை வரை, அதன் சிறப்புத் தன்மை காரணமாக அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அந்தவகையில், இந்தியாவில் அதிகவிலை கொண்ட பொருள்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்தியதை கமெண்ட் பண்ணுங்க.
News September 6, 2025
ராசி பலன்கள் (06.09.2025)

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – பிரீதி ➤ சிம்மம் – களிப்பு ➤ கன்னி – வெற்றி ➤ துலாம் – ஆர்வம் ➤ விருச்சிகம் – பரிவு ➤ தனுசு – தனம் ➤ மகரம் – அனுகூலம் ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – உயர்வு.
News September 5, 2025
பெண்களை காக்கும் AUTO AKKA!

சென்னையில் இரவு நேர பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த ஆட்டோ அக்காவை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஆட்டோ அக்கா எனும் ராஜி கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இரவில் பாதுகாப்பாக பயணிக்க நினைக்கும் பெண்கள் முதலில் அழைப்பது இவரை தான். அதுமட்டுமல்ல ஏழை எளிய மக்களிடம் இவர் காசு வாங்குவதில்லை. பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் நலனுக்காக ‘இணையும் கைகள்’ என்ற குழுவையும் நடத்தி வருகிறார்.