News September 4, 2025
Health: டீயுடன் சேர்த்து சிகரெட் பிடிக்கிறீங்களா? ஜாக்கிரதை

புகைப்பிடிப்பது நமது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், அதனை தேநீருடன் சேர்த்து பிடிப்பதால் நோய்களின் வீரியம் மேலும் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்த டீ + சிகரெட் காம்போவால் உணவுக்குழாய் கேன்சர், நுரையீரல் கேன்சர், தொண்டை கேன்சர், இதய நோய், கருவுறாமை / ஆண்மைக்குறைவு, அல்சர், மறதி, பக்கவாதம் ஆகியவை எளிதில் வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Avoid பண்ணுங்க மக்களே. SHARE.
Similar News
News September 6, 2025
இந்த 8 விஷயங்கள் இருந்தா நீங்களும் ஜெயிக்கலாம்

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது நமது முயற்சியாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் அமையும் என்பார்கள். கிடைக்கும் வாய்ப்பை வெற்றியாக மாற்ற இந்த 8 விஷயங்களை தினமும் கடைபிடியுங்க. ➤இலக்கு ➤சுயவிமர்சனம் ➤பொறுமை ➤திட்டமிடுதல் ➤இடைவிடாத கற்றல் ➤பேச்சுத்திறன் ➤உடற்பயிற்சி ➤சரியான ஓய்வு. இதில் எவற்றை தொடர்ச்சியாக செய்கிறீர்கள்? கமென்ட்ல சொல்லுங்க
News September 6, 2025
திமுகவில் இருந்து விலகினார்.. திடீர் மாற்றம்

தஞ்சை, பாபநாசம் ஒன்றிய குழு செயலாளராக இருந்த சரவணபாபு 30-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டார். திமுகவின் கோட்டையாக இருக்கும் தஞ்சையில் நிகழ்ந்த இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. அண்மை காலமாக NTK-வில் இருந்து பலரும் கூண்டோடு விலகி DMK, ADMK, TVK உள்ளிட்ட கட்சிகளில் ஐக்கியமான நிலையில், இந்த புதிய இணைப்பை ‘நாங்களும் செய்வோம்’ என NTK-வினர் Trending செய்கின்றனர்.
News September 6, 2025
மீண்டும் அரவக்குறிச்சி? கணக்கு போடும் அண்ணாமலை

தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், சொந்த தொகுதியிலேயே தோல்வி என்ற இமேஜை மாற்ற, வரும் தேர்தலில் அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது. MLA இளங்கோ மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் வாக்குகள் தங்களுக்கு வரும் என தலைமை நம்புவதாகவும் கமலாலய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.