News September 4, 2025

திருவள்ளூர் அருகே குழந்தை உயிரிழப்பு

image

திருவள்ளூர், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 7 வயதில் சுபாஷினி, 1 வயதில் ஜெய்கிருஷ் என்ற குழந்தைகள். இந்நிலையில் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஜெய்கிருஷ், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

Similar News

News September 6, 2025

திருவள்ளூர் மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

திருவள்ளூர் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<>முதல்வரின் முகவரி<<>>” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News September 6, 2025

நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

image

திருவேற்காடு நகராட்சியில் உள்ள வார்டு எண் 5-ல் நியாய விலைக் கட்டடம் கட்டும் பணி, வார்டு 11-ல் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் வார்டு எண் 6, 8, 9 இல் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு ரூ.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறுபான்மையினர் நலன் & வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று (செப்.6) பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

News September 6, 2025

BREAKING- திருவள்ளூர்: ஊராட்சி மன்ற தலைவர் கைது

image

நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் கடந்த ஜூலை 14-ந் தேதி காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். கோயம்பேடு அருகே வந்த போது அவரது 4 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து வரலட்சுமி கோயம்பேடு போலீசில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!